நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் I am the life and Resurrection 63-11-18 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்த வர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரை ஒருவர் தேற்றுங்கள். 2. நான் 1 தெசலோனிக்கேயர் நான்காவது அதிகாரத்திலிருந்து வாசித்தேன். நான் இப்பொழுது யோபுவின் புஸ்தகத்திலிருந்து வாசிக்கப் போகிறேன். யோபு 14 ஆம் அதிகாரம். ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப் போகிறான். ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்து வைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டு போவீரோ? அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ ? ஒருவனுமில்லை . அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்து போகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும். ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப் போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம் போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான் மனுபுத்திரன் ஜீவித்து போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறது போல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான் வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை , நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தை குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக. இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாய் இருக்கிறீர். என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரை போடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச்சேர்த்தீர். மலைமுதலாய் விழுந்து கரைந்துபோம்; கன்மலை தன் இடத்தை விட்டுப்பேர்ந்துபோம். தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப் பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பி விடுகிறீர். அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப் பட்டாலும் அவர்களைக் கவனியான். அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான். 3. .... யோபுவின் புஸ்தகம் பதினான்காம் அதிகாரத்தையும் சேர்த்து. 4. இந்தப் பிற்பகலில், நாம் இங்கே கூடியிருப்பது, அது எங்கேயும் எப்போதும் வரவேற்கப்படாத ஒரு காரியம். நாம் எவ்வளவுதான் அதற்காக ஆயத்தமாக இருந்தாலும் அது ஒரு பொருட்டில்லை, அது ஒவ்வொரு வீட்டிற்கும் நிச்சயமாக வந்தே விடுகிற ஒரு வரவேற்கப்படாத விருந்தினராய் இருக்கிறது. அதற்கு இருதயமே இல்லை. நிச்சயமாக நான் மரணமடைந்தி ருந்தால், இந்த மரணம் சம்பவித்த இந்தவீட்டிற்கு வருவதைக்கு றித்து நினைத்து பார்த்து இருக்க மாட்டேன். இந்த வாலிப கிறிஸ்தவன், அவருடைய சரீரம் இப்போது நமக்கு முன்பாக கிடத்தப் பட்டிருக்கிறது அவரை நம்முடைய சகோதரன் கார்னட் என்று நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். 5. இந்த துணிச்சல் மிக்க வாலிப கிறிஸ்தவ பெருந்தகைக்கு நம்முடைய கடைசி மரியாதையை செலுத்துவதற்காக நாம் இங்கே கூடி வந்திருக்கிறோம். நாம் பேசுவது எதுவும் அவருக்கு கேட்காது, இருந்தபோதும் அவருக்காக இந்த பூமியின் மேல் நாம் செய்யக்கூடிய கடைசி காரியமாக இது இருக்கிறது. ஆனால் இதே காரியத்தை தங்களுக்கு முன்னால் கொண்டிருக் கிறவர்களைக் குறித்து நாம் நினைக்கிறோம். ஆனாலும் ஒரு நாளிலே அது கவனிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது, நாம் அதை சந்தித்தே ஆகவேண்டும் வாலிபரோ முதியவரோ, சீக்கிரமோ அல்லது பிறகோ அது நம் எல்லாருக்கும் வந்தே தீரும். 6. நான் சகோதரன் கார்னட் ஐ அறிந்திருக்கிற விதத்தில், அவரைக் குறித்து நான் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டில்லை. அது நம்முடைய கருத்தை மாற்றப் போவதில்லை . அவருடைய ஜிவியமும், அவருடைய சாட்சியும் நான் சொல்லக்கூடிய எந்த ஒரு காரியத்தைக் காட்டிலும் அதிக சத்தமாக உங்கள் மத்தியில் பேசுகிறதாயிருக்கிறது. நான்....... 7. அவனுடைய தாயார் மூலமாக தான் எனக்கு அவனுடனான தனிப்பட்ட தொடர்பு உண்டாயிற்று. ஒரு இரவு, என்னுடைய சபையில் ஆராதனை முடிந்த பிறகு அவள் என்னிடத்தில் வந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான், அவன் போலியோ வியாதியினால் மரித்துக் கொண்டிருந்தான். நான் நினைக்கிறேன், அவன் இனிமேல் ஜீவிப்பான் என்கிற நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்கள். நல்லது, அநேகர் அப்படி சொல்லுகின்றனர், நாம் அதைப் பெற்றிருக்கிறோம். அவை எப்போதும்போல வழக்கமான ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால், நான் இந்த சிறுவனை பார்க்க சென்றபோது ஒரு செயற்கை சுவாச கருவிக்குள் அவனை வைத்திருந்தனர். அவனைக் குறித்து ஒரு காரியம் இருந்தது, முதல்முறையாக நான் அவனை ஏறிட்டுப் பார்த்த போது, நான் அவனை நேசித்தேன். இன்று வரைக்கும் நான் அவனை நேசிக்கிறேன். இப்பொழுது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த வேளையிலும், இன்னும் எப்பொழுதும் நான் அவனை நேசிப்பேன். அவன் ஒரு துணிச்சல் மிக்க ஒரு வாலிபனாய் இருந்தான். மேலும் அவனுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று இருந்தது, அது அவன் ஒரு சாதாரண பையன் என்பதைவிட மிக அதிகமாக எனக்கு தோன்றியது. அவன் ஒரு வாலிபனாக வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருந்தான். அவன் காரியங்களை குறித்து மிகத் தெளிவான புரிந்து கொள்ளுதலை உடையவனாய் இருந்தான். அவன் மறிக்க கூடாது என்று அவனுக்காக நான் ஜெபித்தேன். 8. கடைசியாக, அவர்கள் அவனை அந்த செயற்கை சுவாச கருவியிலிருந்து வெளியே எடுத்தனர், அதன் பிறகு அவன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டான், அதன் பிறகு அவனை ஒரு அசைந்தாடும் படுக்கையில் கிடத்தி, அங்கே அவனை சுவாசிக்கும் படி வைத்தார்கள். 9. நான் கார்னட்டைப் பார்க்க வந்தேன். எப்படிப்பட்ட ஒரு இனிமையான கிறிஸ்தவ ஜீவியமாய் அவனுடைய ஜீவியம் மாற்றப்பட்டிருந்தது, எந்த ஒரு பெற்றோரும் பெருமைப்படத்தக்க ஒரு பையனாக, சொல்லப்போனால் இந்த பூமியிலே நம் எல்லாருடைய பிரயாணமும் அதற்காகத்தான், அதற்காகத்தான் இந்த வாழ்க்கை, இங்கிருந்து புறப்படுவதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வதற்குத்தான். மேலும் எந்த ஒரு சந்தேகத்தின் நிழலுக்கும் இடமில்லாமல் கார்னட் நிச்சயமாகவே இந்த ஆயத்தத்தை செய்திருந்தான். ஒரு தீரமிக்க வாலிபனாக, முழுவதும் கிறிஸ்துவின் ஆவியினாலும் ஜீவனானாலும் நிரப்பப்பட்டவனாய் இருந்தான். அது அவனுக்குள் முழுவதுமாக பிரதிபலித்தது. 10. நான் அரிசோனாவில் உள்ள டூசானில் வசிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்த வாலிபன் வியாதியுற்றான், அவன் மிகவும் வியாதியுற்றான். அவனுடைய விசுவாசத்தின் வெளிப்பாடு, அவ்வளவு தூரத்திலிருந்து என்னை அவன் அழைத்தான். நான் கடைசியாக என் வீட்டிற்குச் சென்று, அந்த சிறு பையனுக்காக தொலைபேசி வாயிலாக நான் ஜெபித்த போது, தேவனுடைய கிருபை அவனுக்கு இறங்கி வந்தது. அவன் சுகமாகிவிட்டான். அவ்வப்போது அவனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அவன் என்னைக் கூப்பிடுவான். நாங்கள் இருவரும் தொலைபேசி வாயிலாகவே சேர்ந்து ஜெபிப்போம். அவன் இந்த இடத்தை அடைந்திருந்தாலும், அவனுக்கு இது நேரிட்டிருந்தாலும், பரலோகப் பிதா அவனை ஒருபோதும் கை விட வில்லை என்றே நான் கருதுகிறேன். அவன் வைத்தி அவன் பெற்றுக்கொண்டான். 11. கடந்த இலையுதிர் காலத்தின் போது, நான் இங்கே இருந்த சில நண்பர்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், கார்னட்டை இந்த வாழ்க்கையில் கடைசி முறையாக சந்தித்தேன். அவருடைய அழகான சிறிய வீட்டிற்குள் நாங்கள் எதிர்பாராதவிதமாக நுழைந்தோம். அவனுடைய ஜனங்களோடு அவன் ஜீவித்துக் கொண்டிருந்தான். அங்கே நாங்கள் பார்த்த காரியம், ஒரு கிறிஸ்துவ ஊழியக்காரன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல ஒரு காட்சிக்கு முன்னுதாரணமாக அது இருந்தது. அவர் அந்த அசைந்தாடும் படுக்கையின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார், அவருடைய கை ஒரு சிறிய கயிறில் தொங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் வீட்டிற்குள் பிரவேசித்தபோது, எப்போதும்போல அன்பான வரவேற்பு எங்களுக்கு கிடைத்தது. அங்கே கார்னட், அவருக்கு முன்பாக வேதாகமம் இருந்தது. அங்கே இருந்த ஒரு சோபாவில் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த ஒரு பணிப்பெண் இருந்தாள். அங்கே அவர்கள் வேதாகமத்தை தியானித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவரை நோக்கி பார்த்தேன். அப்பொழுது அது என் இருதயத்தை அப்படியே கரைத்து விட்டது. 12. மேலும் நான் அவரிடத்தில் சொன்னேன், நான் அவரிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டேன். நான் கேட்டேன், கார்னட் ஒரு வேளை நீ இப்பொழுது இருக்கிற இந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருந்து, இன்று இரவிலே ஒருவேளை யாராவது என்னைக் கூப்பிட்டு ''கார்னெட் பீக் என்கிற ஒரு வாலிபன் நெடுஞ்சாலையில் தன்னுடைய காரில் வைத்து கொல்லப்பட்டார். மேலும் அந்த பையன் குடித்திருக்கிறார், அவருடைய ஆத்துமா தேவனை சந்திக்க சென்றுவிட்டது” என்று சொல்லியிருந்தால், அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீ விரும்புவாயா அல்லது ''இப்பொழுது இருக்கிறது போலவே இருக்கட்டும்'' என்று சொல்லுவாயா? 13. அவர் சொன்னார்,” இப்பொழுது இருக்கிறது போலவே அது இருக்கட்டும், நான் இயேசுவை இப்பொழுது எந்த விதத்தில் அறிந்திருக்கிறேனோ, அது என் ஜீவனைக் காட்டிலும் மேலானது. என் வாழ்நாள் முழுவதும் நான் இதே நிலையில் இருக்க நேரிட்டாலும் நான் அப்படியே இருப்பேன்” என்று அவர் கூறினார். 14. ஆனால் அவர் சொன்னார் சகோதரன் பிரான்ஹாம் நான் உங்களுக்கு காண்பிக்கட்டும், ''நான் இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை'' என்று சொல்லி, அவருடைய கைகளை இப்படியும் அப்படியும் அவரால் அசைக்க முடிந்தது. அவர் முற்றிலும் சுகமாகி நன்றாக எழுந்து வெளியே நடந்து செல்லக்கூடிய ஒரு நல்ல நாளை மிகவும் ஆர்வத்தோடு அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு வயதானவன் என் வாழ்க்கையில் நிறைய காரியங்களை பார்த்தவன் ஆனால், கார்னட்டைப் போல துணிச்சல் மிக்க ஆவியையுடைய ஒரு பையனை நான் எப்போதாவது பார்த்ததாக நான் நம்பவில்லை. அவருக்கு மகத்தான நம்பிக்கைகள் இருக்கின்றன. 15. சில இரவுகளுக்கு முன்பு, அவருக்கு குடல் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு சொல்லப்பட்டது. அவர் கடந்து போய்க் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து கொண்ட பொழுது, நல்லது அவர் எனக்காக கூப்பிட்டார், மேலும் அந்த நேரத்தில் நான் நியூயார்க்கில் ஒரு அரங்கத்தில் இருந்தேன் என்று அவருக்கு தெரியாது. நான் அரங்கத்தை விட்டு வெளியே வந்த உடனே அந்த தந்தி அல்லது செய்தி எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் வேக வேகமாக ஒரு தொலைபேசியிடம் ஓடி அவரை அழைத்தேன், ஆனால் அவரை கவனித்துக் கொண்டிருந்த ஒரு அருமையான சகோதரன் தொலைபேசியை எடுத்து ”சகோதரன் பிரான்ஹாம், கார்னெட் ஆறு மணிக்கே இயேசுவை சந்திக்கும்படி போய்விட்டார்” என்று சொன்னார். 16. அவர் நம்மை விட்டுப் போய்விட்டார். நாம் நாம் அதை உணர்கிறோம். ஆனால் இந்த காரியம் இதோடு முடிந்து விட்டதா? அப்படிப்பட்ட ஒரு காரியம் உண்டா? என்று உண்மையில் நான் ஆச்சரியப்படுகிறேன். இந்த தம்பி நம்மை விட்டுப் போய்விட்டார் என்று நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். அதுதான் வாழ்க்கை , ஆனால் இதற்குப் பிறகு என்ன இருக்கிறது என்று நாம் சிந்திப்போம். என்று சொல் லக் கூடிய ஏதாவது ஒன்று இருக் கின்றதா? நாம் அவரைமறுபடியும் பார்க்க முடியுமா? கார்னட்டை நாம் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்கப் போகிறதா? அதைக்குறித்து தான் அடுத்த சில நிமிடங்களுக்கு நான் உங்களோடு கூட பேச விரும்புகிறேன். நாம் அவரை மறுபடியும் பார்ப்போம் என்கிற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா? யோபு இந்த கேள்வியை கேட்டார், வேதாகமத்தில் மிகவும் பழமையான புத்தகம் அது. அவன் கேட்டான் ''மனிதன் செத்தபின் பிழைப்பானோ” ஆம் என்றால் அதற்கான ஆதாரம் ஏதாகிலும் இருக்கிறதா? இவர் உயிர்த்தெழுவார் என்பதற்கான வலுவான ஆதாரம் ஏதாகிலும் இருக்கக் கூடுமா? ஆம் நான் அப்படித்தான் நினைக்கிறேன். 17. சிருஷ்டி கர்த்தரை நாம் சேவிக்கிறோம், என்பதை நாம் கவனிப்போம் என்றால், நம்மை உண்டாக்கினவர் ஒருவர் இல்லாமல் நாம் அப்படியே இங்கே வந்துவிடவில்லை என்று நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் இப்போது இருக்கிற வண்ணமாக சும்மா அப்படியே வந்துவிட முடியாது. ஒரு காரணர் இல்லாமல் நாமாக வந்திருக்க முடியாது, எப்படி என்னுடைய கைக்கடிகாரம் ஒருவர் அதை உண்டாக்காமல் அதிலுள்ள பல் சக்கரங்கள் மற்றும் நேரம் காட்டும் முட்கள், அதெல்லாம் தானாக அப்படியே வந்திருக்க முடியாது. அந்த கடிகாரத்தை உண்டாக்கிய நுண்ணறிவு படைத்த ஒருவர் அங்கே நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கை கடிகாரத்தை உண்டாக்கின ஒரு மனிதனைக் குறித்து நீங்கள் நினைத்துப் பாருங்கள், அந்த மனிதன் இல்லாமல் இந்த கடிகாரம் சும்மா அதுவே தானாக வந்துவிட முடியாது. அப்படி என்றால் மனிதர்களாகிய நாம் தானாக வந்துவிடுவது எவ்வளவு கூடாத காரியமாய் இருக்கிறது! 18. மிஷனரியாக இருந்து உலகம் முழுவதும் சுற்றி வருகிற நான் இதுவரை ஏழு முறை இந்த உலகத்தை சுற்றி வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற பல்வேறு விதமான மதங்களை எல்லாம் பார்க்கும்போது அவர்கள் ஒவ்வொருவருடைய தத்துவமும் என்ன சொல்லுகிறது என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அவர்களில் அநேகர் மறு அவதாரம், மறுபிறவி போன்றவைகளை நம்புகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் அதில் மாத்திரமே சத்தியம் இருக்கிறது, ஏனென்றால் சிருஷ்டி யாவும் கிறிஸ்தவத்தை குறித்தே பறைசாற்றுகின்றன. 19. யோபு சொன்னான், ''ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு, அது திரும்ப தழைக்கும், மலர்கள் உதிர்ந்து போனாலும் அவை மறுபடியும் பூக்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு”. ஆனால் அவன் சொன்னான், ''மனுஷனோவென்றால் படுத்துக் கிடக்கிறான், அவன் ஜீவித்து போனபின் அவன் எங்கே?” யோபு எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்றால், அவன் ஒரு பிரபலமானவனாய் இருந்தான். அவனுடைய நாட்களில் அவன் ஒரு சிறந்த தத்துவஞானியாயிருந்தான், மேலும் அவன் ஒரு விசுவாசியாக இருந்தான். அவனுக்குள் நிறைய ஞானம் இருந்தது. ஆனால் சாத்தானோ அவனை புடைக்க வேண்டுமென்றும் சோதிக்க வேண்டுமென்றும் விரும்பினான். 20. மேலும் எல்லா கிறிஸ்தவர்களும், விசுவாசிகளும் சோதிக்கப் படுகின்றனர். தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு குமாரனும் சோதிக்கப்பட்டு சிட்சிக்கப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது. 21. ஆகவே யோபு அறிந்திருந்தான், சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிகளையெல்லாம் சிருஷ்டித்திருக்கிறார் என்று. மேலும் சிருஷ்டிப்பில் தாவரங்கள் மற்றும் பிற சிருஷ்டிப்புகளில் உயிர்த்தெழுதல் ஒன்று இருக்கிறது என்பதை கவனித்தான். ஆனால், அவன் சொன்னான் 'மனுஷன் படுத்துக் கிடக்கிறான், மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான். மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? அவனுக்கு என்ன சம்பவித்தது?” என்று. 22. அதன் பிறகு நீதிபரரின் வருகையை ஒரு தரிசனத்தின் மூலம் அவன் கண்டான், அவன் தான் ஒரு பாவி என்று அறிந்திருந்தான். மேலும் மனுஷன் ஏன் படுத்துக் கிடக்கிறான் என்றும், அவன் ஏன் எழுந்திருப்பதில்லை என்றும், அவனுக்காக பரிந்து பேச ஒன்றுமில்லை என்பதையும் அவன் அறிந்திருந்தான். 23. மலர்கள் ஒன்றும் செய்ததில்லை என்று அவன் அறிந்திருந்தான். அது இங்கு ஒரு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது, அது அதைக் குறித்த தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. மேலும் அந்த காரணத்தினால்தான் ஒரு மலரானது மரிக்கும்போது அதனால் திரும்பவும் உயிர் பெற முடிகிறது. 24. ஆனால் ஒரு மனிதனோ பாவம் செய்திருக்கிறான். மேலும் அவன் தன்னுடைய சிருஷ்டிகருக்கு முன்பாக எப்பொழுதாவது எழுந்து நிற்க அவனுக்கு வழியே இல்லை. மேலும், இப்படிப்பட்ட நிலையில் நீதிபரர் வருகிறதை காணும்படி தேவனால் அவன் அனுமதிக்கப்பட்டான். அதாவது, ஒரு பாவியான மனுஷன் மேலும் பரிசுத்தமான தேவன் மேலும் தன் கைகளை வைக்கத்தக்க மேலும் பாலத்தை உண்டாக்கத் தக்க அந்த மனுஷகுமாரன். மேலும் ஆவியானவர் அந்த தீர்க்கதரிசியின்மேல் வந்த பொழுது அவன் கூக்குரலிட்டான் ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் இந்த பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல என் கண்களே அவரைக் காணும். 25. முழு கிறிஸ்தவமும் உயிர்த்தெழுதலையே அடிப்படையாக கொண்டிருக்கிறது. அதுதான் நமது நம்பிக்கை. இப்பொழுது அது ஏன் என்று கண்டு கொள்வோம். நம்மிடத்தில் ஒரு வேதாகமமே இல்லை என்றாலும், கிறிஸ்தவ மார்க்கம் தான் சரியானது என்று நாம் அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால் சிருஷ்டிகர் காரியங்களை அவ்விதமாகத்தான் அமைத்திருக்கிறார். 26. இப்பொழுது உயிர்த்தெழுதல் என்பது ஈடு செய்வதல்ல, உயிர்த்தெழுதல் என்பது தொலைந்துபோன அதே காரியத்தை திரும்ப கொண்டு வருவதாய் இருக்கிறது. இப்பொழுது நான் என்னுடைய வேதாகமத்தை அலமாரியிலிருந்து எடுக்கும்போது, அது கை தவறி கீழே விழுந்து நான் அதைப் பிடிக்கப் போய் அதற்கு பதிலாக இன்னொரு வேதாகமத்தை கையில் எடுத்து மறுபடியும் அலமாரியில் வைப்பேன் என்றால் அது ஈடு செய்வதாய் இருக்கிறது. ஆனால் உயிர்த்தெழுதல் என்பது எந்த வேதாகமம் கீழே விழுந்ததோ அதையே மறுபடியும் எடுத்து மேலே வைப்பது, அதுதான் உயிர்த்தெழுதல் என்பதின் பொருளாய் இருக்கிறது. அதாவது, மீண்டும் எழுப்பிக் கொண்டு வருவது. 27. மேலும், தேவன், அந்த மகத்தான சிருஷ்டிகர் தன்னை தன்னுடைய எல்லா சிருஷ்டிப்பின் மூலமும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாம் அவருடைய சிருஷ்டிப்பின் ஒரு பாகமாய் இருக்கிறோம். பூக்களைப் போல, மரங்களைப் போல, இன்னும் மற்ற இயற்கையின் சிருஷ்டிப்பைப் போல. நாம் அவருடைய சிருஷ்டிப்பின் பாகமாய் இருக்கிறோம். 28. இப்பொழுது தேவன், அவர் வித்தியாசங்களின் தேவனாக இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் ஒரே விதமாக உண்டாக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் மலைகளாகவே உண்டாக்கி விடவில்லை. அவர் வனாந்திரத்தையும், சமவெளிகளையும் புல்வெளிகளையும் உண்டாக்கி இருக்கிறார். மேலும் அவரிடத்தில் மஞ்சள் பூக்களும், வெள்ளை , நீலம், ஊதா நிறம் இன்னும் வித்தியாசமான நிறங்கள் உள்ளன. அவர் உயரமான மனிதன், குள்ளமான மனிதன், கருமையான தலைமயிர் கொண்டவன், பழுப்பு நிற தலைமயிர் கொண்டவன், சிவப்பு நிற தலைமயிர் கொண்டவன் அப்படியாக மனிதர்களை உண்டாக்கி இருக்கிறார். அவர் வித்தியாசங்களின் தேவனாய் இருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொன்றும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. அவர் ஒவ்வொன்றையும் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உண்டு பண்ணியிருக்கிறார். மேலும் அவருடைய நோக்கத்தை சரியாக நிறைவேற்றும் ஒவ்வொன்றுக்கும் நிச்சயமாக ஒரு உயிர்த்தெழுதல் இருக்கிறது. 29. இப்பொழுது, உடனடியாக அதை நினைப்பதும் அதை கிரகிப்பதும் கடினமான காரியமாக தான் இருக்கும். ஆனால், இதோ இந்த காரியத்தை இந்த மத்தியான வேளையிலே நமக்கு முன்பாக நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே இதைக் குறித்து சிந்திப்போம். 30. இப்பொழுது, இங்கே இந்த மலர்கள் இருக்கின்றன, இவைகள் இந்த பூமிக்கு எதற்காக வந்தனவோ அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவை எதற்காக வந்தனவென்றால், களைத்துப்போன இந்த அறையை மகிழ்விப்பதற்காக, இந்த பிற்பகலில் இதோ இந்த அருமையான சகோதரன் இங்கே படுத்து கிடக்கிறார், நித்திரை அடைந்திருக்கிறார். மேலும், இந்த மலர்களை நாம் கவனிக்கிறோம். 31. கென்டக்கியிலுள்ள ஸ்திரீகளாகிய உங்களைப்போலவே, நானும் இங்கே உள்ளவன்தான். மேலும் ஸ்திரீகளாகிய நீங்கள் உங்கள் வீட்டைச் சுற்றிலும் செடிகளை நடுவதை நான் கவனித்திருக்கிறேன். அவை கோடை காலம் வரும்பொழுது மிக அழகாக பூத்துக் குலுங்குகின்றன. மேலும், உங்கள் வீடுகளை அவைகள் பிரகாசிக்கச் செய்கின்றன. மேலும், அதன் பிறகு ஒருவேளை வருடத்தின் இலையுதிர் காலத்தின் போது திடீரென்று ஒரு பனி அவைகளைத் தாக்குகின்றது, அதுதான் அவைகளின் மரணம். இப்பொழுது அந்த மலர்கள், அவைகளில் உள்ள இதழ்கள் ஏற்கனவே உதிர்ந்து விட்டிருந்தாலும் சரி, அல்லது அவைகள் இளமையான பூக்களாக இருந்தாலும் சரி, அல்லது அவைகள் என்னவாக இருந்தாலும் சரி, பனி அவைகளைத் தாக்கும்போது, அது அவைகளை எல்லாம் கொண்டு சென்று விடுகிறது. அது மரணம். அதற்கு பாரபட்சம் இல்லை , திறமை, வயது எதையும் அது பார்ப்பதில்லை. அது அப்படியே அதை தாக்குகிறது அது எங்கே தாக்குகிறதோ அதை அப்படியே எடுத்துக் கொள்கிறது. அப்பொழுது நாம் கவனிக்கிறோம் அந்த இதழ்கள் அந்த மலர்களிலிருந்து கீழே விழுகின்றன, அதன் பிறகு அந்த மலர்களிலிருந்து கருப்பு நிறத்தில் சிறிய விதைகள் கீழே விழுகின்றன......... 32. இப்பொழுது இது பார்ப்பதற்கு ஒருவேளை சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். ஆனால் அந்த விதத்தில் தான் நீங்கள் தேவனையும் காணமுடியும், எளிமையான காரியங்களில், சிக்கலான காரியங்களில் அல்ல, நாம் எளிமையாக அதை நோக்கிப் பார்த்தால், அதை காணக் கூடிய விதத்தில், தேவன் அதை அவ்வளவு எளிமையாக்கிவிட்டார். 33. இப்பொழுது அந்த மலருக்கு தேவன் சவ ஊர்வலம் நடத்துகிறார், பார்ப்பதற்கு வினோதமாக தோன்றலாம். ஆனால், அந்த சிறிய விதையானது அந்த தரையிலே விழுந்து கிடக்கிறது. அதன் பிறகு இலையுதிர் காலத்திற்குப் பிறகு மழை வருகிறது. அது வானத்திலிருந்து கண்ணீர் துளிகள் விழுவது போல் இருக்கிறது. அவை அந்த கீழே கிடக்கிற அந்த சிறிய விதைகளை மண்ணிலே புதைக்கிற வரைக்கும் அதன்மேல் விழுந்து கொண்டே இருக்கிறது. 34. மேலும் இதோ வருகிறது அந்த குளிர்ச்சியான குளிர்காலம். இப்பொழுது இதழ்கள் எல்லாம் போய்விட்டன, தண்டு அதுவும் போய்விட்டது, பூமியிலுள்ள கிழங்கு அதுவும் போய்விட்டது, வேரும் காய்ந்து போனது. ஓ அந்த விதை அந்த குளிர் அதைத் தாக்கும் பொழுது அது அந்த விதையை உறையச் செய்துவிடுகிறது. அது அந்த விதையை வெடித்து பிளக்கச் செய்கிறது, அதிலிருந்து சாறு வெளியே வழிந்து விடுகிறது. இப்பொழுது நாம் பெப்ருவரி அல்லது மார்ச் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அங்கே இதழ்கள் இல்லை, தண்டும் இல்லை, விதையும் இல்லை, சாரமும் இல்லை, இல்லை, ஒன்றுமே அங்கு இல்லை. 35. அதுதான் அந்தப் பூவின் முடிவா? இல்லை எவ்விதத்திலும் இல்லை. அங்கே ஒரு சிறு ஜீவ கிருமி எங்கோ அந்த விதைக்குள் எங்கோ இருக்கிறது. அது அந்த மண் துகள்களை உங்கள் கையில் அள்ளி நீங்கள் பார்க்கலாம், அதை ஆய்வகத்துக்கு கொண்டு சென்று அதை ஒரு விஞ்ஞானியிடம் கொடுத்து அந்த விஞ்ஞானி அதை முன்னும் பின்னுமாக புரட்டி புரட்டி சோதித்துப் பார்க்கலாம். அவனால் அங்கே இருக்கிற அந்த சிறிய ஜீவ கிருமியை கண்டுபிடிக்கவே முடியாது. தேவன் அதை ஒளித்து வைத்துவிட்டார். ஆனால் இந்த உலகம் அந்த சூரியக்குடும்பத்தில் அது சுழன்று சுழன்று, அந்த சூரிய வெளிச்சம் அதன்மேல் அந்த விதையின் மேல் படுகிற வரைக்கும்தான் காரியம். அதன் பிறகு இனிமேலும் உங்களால் அந்த ஜீவனை ஒளித்து வைக்க முடியாது. 36. இப்பொழுது உங்கள் தோட்டத்தில் உள்ள புற்களின் மீது சிமெண்ட் கலவையை கொண்டு பாதை அமைக்கிறீர்கள். அடுத்த கோடை வரும்பொழுது பெரும்பாலான புற்கள் எங்கே இருக்கின்றன? உங்களுடைய சிமெண்ட் பாதையின் இரண்டு பக்கங்களிலும் தான். ஏன், அது அந்த சிமெண்ட் பாதையின் அடியில் மறைந்து கிடக்கின்ற ஜீவன்கள். மேலும் அந்த இளவேனிற்காலம் வரட்டும், அப்பொழுது அதன் மீதாக ஒரு பாறையே கிடந்தாலும் அது அவற்றை ஒளித்து வைக்க முடியாது. அதில் உள்ள அந்த ஜீவன் சரியாக அதனூடாக வழியை உண்டாக்கிக் கொண்டு வெளியே வந்துவிடும். அதனால் தான் பாதையின் இரண்டு ஓரங்களிலும் அவ்வளவு புற்களை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த ஜீவனை ஒளித்து வைக்க முடியாது, ஏனென்றால் தேவன் அவைகளின் மேல் சூரிய ஒளியை படும்படி செய்துவிட்டார். அதுதான் அந்த தாவரங்களின் ஜீவனை கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறது. 37. நல்லது அவர் அந்த சூ- ரி- ய- னை அந்த தாவரங்கள் மேல் வீச செய்கிறார் என்றால், பிறகு அவர் கு-மா-ர-னை நித்திய ஜீவன் மேல் வீச செய்கிறார். ஆகவே பூக்கள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும் பொழுது அவைகளுக்கு ஒரு உயிர்த்தெழுதலை தருவார் என்றால், அவர் மனிதனுக்கு எவ்வளவு அதிகமாக ஒரு வழியை கொடுத்திருக்க வேண்டும்! உங்களுக்கு தெரியும் மனிதனுக்கு ஒரு வழி கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவ கு-மா-ர-னுடைய நேரம் வரும் பொழுது அவனும் கூட திரும்ப வந்தாக வேண்டும். சூரியன் அது தாவரங்களை கொண்டு வருகிறது. ஏனென்றால் அது தான் அவைகளைக் கட்டுப்படுத்துகிறது. உங்களால் அதை ஒளித்து வைக்க முடியாது. அது வந்தே ஆகவேண்டும். அதுபோலவே தேவனுடைய கு-மா-ர-ன் மனிதர்களை கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதுதான் நித்திய ஜீவன், ஆகவே தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளும் என்கிற விதத்தில் நாமும் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவோம் என்றால், தேவனுடைய குமாரன் தோன்றுவதற்கான நேரம் வரும் பொழுது, அந்த ஜீவனையும் உங்களால் ஒளித்து வைக்க முடியாது. இயற்கை முழுவதும் அதைக் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது. 38. இப்பொழுது இங்கே கென்டக்கியில் நாம் இலையுதிர் காலத்தில் இருக்கிறோம். இங்கே அழகான மரங்கள் தங்கள் இலைகளை துளிர்க்க செய்திருக்கின்றன. மேலும், அதன் பிறகு நமக்கு இன்னுமாக எந்த ஒரு உரை பனியும் உண்டாகவில்லை, அதற்கு முன்பாகவே நீங்கள் கவனித்தீர்களா? உங்கள் தோட்டத்திலும், சுற்றுப்புறத்திலும் எப்படி அந்த இலைகள் உதிர ஆரம்பிக்கின்றன. ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே, ஏன்? எது அந்த இலைகளை உதிரச் செய்கிறது? அது எது என்றால், அந்த ஜீவனானது அந்த இலைகளை விட்டுக் கடந்து போய்விட்டது. அது எங்கே போனது? சரியாக மரத்தின் வேருக்குள்ளாக, எந்த ஒரு புத்திசாலித்தனம் அந்த ஜீவனை அந்த இலைகளை விட்டு நீங்கி பூமிக்கு அடியில் உள்ள அந்த வேர்களுக்குள் சென்று விடும்படி அதற்கு சொன்னது? ஏன் என்றால் அது அங்கேயே தரித்திருக்குமென்றால் அது அந்த மரத்தைக் கொன்றுவிடும். அது அந்த மரத்தின் வேருக்குள்ளாக சென்று தன்னை ஒளித்துக் கொண்டது. எதுவரைக்கும்? குளிர்காலம் கடந்து போகிற வரைக்கும், அடுத்த இளவேனிற்காலம் வருகிற வரைக்கும். அப்பொழுது அது அந்த ஜீவனை திரும்பக் கொண்டு வருகிறது. அப்பொழுது வேறொரு இலை துளிர்க்க ஆரம்பிக்கிறது. 39. இப்பொழுது ஏதோ ஒரு புத்திசாலித்தனம் அதை செய்து கொண்டிருக்கவேண்டும். மரத்திற்கு எந்த ஒரு புத்தியும் இல்லை . அது வெறும் ஒரு தாவர இனம். ஆனால் ஏதோ ஒரு மகத்தான ஞானம் அந்த மரத்தினிடத்தில் சொல்லுகிறது, எந்த ஒரு உரை பனியும் தாக்குவதற்கு முன்பாகவே, அதற்குள் இருக்கிற ஜீவனிடத்தில், ''நீ போய் உன்னுடைய வேர்களுக்குள்ளாக அங்கே ஒளித்துக் கொள்'' என்று. அதன் பிறகு சூரியன் பின்னோக்கி நகரும் பொழுது அந்த இலைக்கு எப்படி தெரிகிறது சூரியன் மறைகிறது குளிர் வந்து கொண்டிருக்கிறது என்று. அது ஒரு ஞானம், அந்த மரங்களுக்கு அதைச் சொல்கிறது. அதுதான் தேவன். 40. என்ன ஒருமாதிரி! அங்கே நாம் என்ன காண்கிறோம்? இந்த மலரில் நாம் என்ன கண்டோம்? அதேபோல ஜீவன், மரணம், அடக்கம் பண்ணுதல், உயிர்த்தெழுதல் அதேபோல. மேலும் தேவனும் கூட மலர்களைப் பறித்துக் கொள்கிறார், அந்த இலைகள் பழுப்பு நிறம் ஆனதும், சிவப்பு மற்றும், பச்சை மற்றும், பல்வேறு நிறங்களிலான இந்த மலர்கள் மரித்த உடனே அவைகளைக் கொண்டு அவர் ஒரு பூங்கொத்தை செய்து பூமியின் மார்பில் வைக்கிறார். இதோ இங்கே இருக்கிறது போலவே. இந்த பிற்பகலில். 41. தேவன் சிக்கலானவர் அல்ல. மக்கள்தான் சில நேரங்களில் அவரை சிக்கலாக்கிவிட விரும்புகிறார்கள். ஆனால், அவர், தேவன் எளிமையில் தான் அறியப்படுகிறார். நாம் அவரை அவருக்கு மேலே பார்த்து அவரை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். ஆனால் அவரோ மிகவும் எளிமையானவராக இருக்கிறார். அவர் தம்மை அவ்விதமாகத்தான் ஆக்கிக் கொள்கிறார். அதுதான் அவரை மகத்தானவராக ஆக்குகிறது. 42. இப்பொழுது கவனியுங்கள், இந்த மரத்தில் இருந்த இதன் ஜீவன், அது தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றி, அதன்பிறகு கல்லறைக்குள் சென்றது. வசந்த காலம் வரைக்கும் அங்கேயே தங்கி இருக்கும்படி. இப்பொழுது ஏதோ ஒரு ஞானம் அதைத் திரும்ப இங்கே கொண்டு வர வேண்டும். ஆப்பிள் பழங்களோடு கூட அது திரும்பி வரவேண்டும். இன்னும் வேறு என்ன விதமான கனிகளைக் கொடுக்கிற மரமோ, அதனுடைய இலைகளும் இன்னும் மற்ற எல்லா காரியங்களும். அது திரும்ப வருகிறது. 43. இப்போது யோபு இங்கே சொல்லுகிறார், ''ஓ இப்போது நீர் எனக்கு ஒரு நாளைக் குறித்து, உம்முடைய கோபம் கடந்து போகும் மட்டும் என்னை கல்லறைக்குள் ஒளித்து து? தேவனுடைய கோபம் கடந்து போகும் வரைக்கும் நாம் கல்லறைக்குள் ஒளித்து வைக்கப் படுகிறோம். அதன் பிறகு திரும்பி வருகிறோம். 44. என் மீட்பர் உயிரோடிருக்கிறார், கடைசி நாளில் அவர் இந்த பூமியின் மேல் நிற்பார், என் தோல் முதலானவை அழிந்து போன பிறகும் என் மாம்சத்தில் இருந்து நான் என் தேவனைக் காண்பேன். ஒரு நாள் உயிர்த்தெழுதலானது ஒரு மனிதன் மூலமாகக் கொண்டுவரப்படும் என்பதை அவன் கண்டான். அப்பொழுது பாவத்தின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுவிடும். அந்த நீதிபரர், அந்த தேவகுமாரன், பாவிகளுக்காக மரிக்க வரும்பொழுது, அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு மனிதன் இந்த பூமியின் மேல் இல்லை. பரிசுத்தமான தேவனுக்கும் பாவியான ஒரு மனிதனுக்கும் இடையிலே ஒரு பாலத்தை உண்டாக்கும் படியான ஒரு மனிதன் அதுவரைக்கும் இல்லாதிருந்தான். ஆனால் யோபு இங்கே, அவருடைய வருகைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக அவருடைய மரணம், அடக்கம் பண்ணப்படுதல், அவருடைய உயிர்த்தெழுதல் மூலமாக வரும் நீதிமானாக்கப்படுதல், மேலும் ஒரு விசுவாசியின் உயிர்த்தெழுதலை குறித்த முற்றிலுமான உத்தரவாதம் அதையெல்லாம் அவன் கண்டான். அந்த காரியங்கள் எல்லாம் உண்மையாக இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வது என்ன ஒரு ஆறுதலை கொடுக்கிறது! அது ஏதோ கட்டுக்கதை அல்ல. 45. இங்கே பாருங்கள். அந்த சூரியனைப் பாருங்கள். இந்த சூரியன் காலையில் உதிக்கிறது, அப்பொழுது அது ஒரு பிறந்த குழந்தை. தேவன் அதை அனுப்புகிறார். அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக. காலை ஒன்பது மணிக்கு அது பள்ளிக்குப் போகிறது. அது ஒரு பருவ வயது, அதற்கு பிறகு ஒரு 12 மணி அளவில் அது முற்றிலும் முதிர்ந்ததாய் மாறுகிறது. பிறகு 12 மணிக்கு, 50 வயதை கடந்து விடுகிறது. அதற்கு பாதி வயதாகி விடுகிறது. அதற்கு பிறகு அது பலவீனமாகி, வயதாகி கடந்து செல்ல ஆரம்பிக்கிறது. ஆனால் இதுவரைக்கும் அது உறுதியாக இருந்தது, அதற்குப் பிறகு அது பலவீனம் அடைகிறது. 46. நாம் செய்வது போலவே. நாம் பெலத்தோடு வெளியே புறப்படுகிறோம். மேலும் நாம் முழு வளர்ச்சி அடையும் பொழுது நாம் நல்ல பலவான் ஆகிறோம். அதற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட வயது வரை நாம் சிறப்பாக இருக்கிறோம். அதற்குப் பிறகு பலவீனமடைய ஆரம்பிக்கிறோம். அதற்குப் பிறகு எல்லா நேரமும் தொடர்ந்து கீழ் நோக்கி செல்கிறோம். 47. கடைசியாக, சற்று நேரம் கழித்து, அது மேற்கேயுள்ள கீழ்வானத்தில் மறைகிறது, ஒரு அழகான வெளிச்சம் அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. அது மரிக்கிறது. பூமி குளிர்ச்சி அடைகிறது, குளிர்ந்து போகிறது, இரவு முழுவதும் குளிர்கிறது. இப்பொழுது அந்த சூரியனுடைய முடிவு அவ்வளவுதானா? அல்லது அந்த சூரியனை நீங்கள் பார்ப்பது இதுதான் கடைசி தடவையா? இல்லை அடுத்த நாள் காலை அவள் மறுபடியும் எழும்புகிறாள், உயிர்த்தெழுதலில். தேவன் ஒவ்வொரு நாளும் அதற்கு சாட்சி பகர்கிறார். “ஒரு ஜீவன், மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல்.' உண்டென்று சொன்னார். 48. நீங்கள் நோக்கிப் பார்க்கிற ஒவ்வொன்றும் அதே விதமாகத்தான் பேசுகிறது, ஜீவன், மரணம், அடக்கம் பண்ணப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல். அவ்வளவுதான். அது அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும்போது. 49. இப்போது இந்த மலரானது அது ஒரு மலராக இருந்து ஆனால் அவ்விதமாகவே ஒரு மலராக அது திரும்ப ஜீவிக்க முடியாத ஒரு நேரம் உண்டு. அதுதான் நான் இங்கே சொல்ல வருகிற ஒரு கருத்து. இப்பொழுது, இந்த பிற்பகலில் கார்னட் ஒருவேளை எழுந்து வந்து எனக்காகப் பேசுவார் என்றால், அவர் நான் எதை பேச வேண்டுமென்று விரும்புகிறாரோ அதையே அவர் பேசுவார். ஏனென்றால் அவர் தேவனுடைய சமூகத்தில் இருக்கிறார். ஒருவேளை அந்த வித்து...... 50. இந்த பிற்பகல் வேளையில் இங்கே இருக்கிற மனிதர்களாகிய உங்களில் அநேகர் விவசாயிகளாக இருக்கின்றீர்கள். அல்லது இந்த சுற்றுப்புறத்தில் வசிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள். அங்கே நீங்கள் வயல்வெளியையும் இயற்கையையும் பார்க்கிறீர்கள். ஒருவேளை ஒரு விதையானது நடப்படும் என்றால், அந்த விதை பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறது என்பது காரியமில்லை. அந்த விதையானது ஜெனிப்பிக்கப் படவில்லை என்றால் அது உயிர் வாழப் போவதில்லை. அது நிலத்துக்கு அடியில் சென்று அங்கே இருந்து அழுகிபோகும். அதனுடைய முடிவு அவ்வளவுதான். வேறு வழியே இல்லை. அதை மறுபடியும் ஜீவனைப் பெறச் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அதற்கு அந்த விதை மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவேண்டும், இல்லை என்றால் அது திரும்ப முளைத்து எழும்பாது. 51. மேலும், அங்கேதான் நம்முடைய உயிர்த்தெழுதலின் உறுதிப்பாடும் இருக்கிறது. இயேசு சொன்ன வண்ணமாக, ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்'' நாம் இங்கே ஒரு வாய்ப்பை எடுத்துக் கொள்ளும் படியாக வைக்கப் பட்டிருக்கிறோம். 52. மேலும் இப்பொழுது, அந்த அழகிய மலர், அது எவ்வளவு அழகாக இருந்தாலும் அது ஒரு காரியம் இல்லை . அதனுடைய விதை எவ்வளவு அழகாக வட்டமாக உருண்டையாக இருந்தாலும், அது ஒரு காரியம் இல்லை . ஒரு கலப்பட சோளத்தைப் போல. நாம் அந்த கலப்பட சோளத்தை நடலாம், ஆனால் அது ஒன்றும் செய்யாது. அது ஒரு அழகான விதை, ஆனால் ஜீவன் இல்லாதது, அதனுடைய ஜீவன் தாறுமாறாக்கப்பட்டுவிட்டது. 53. மேலும் தேவனிடத்திலிருந்து வந்து தாறுமாறாக்கப் பட்ட எந்த ஜீவனும் மறுபடியும் ஜீவிக்க முடியாது. நாம் மறுபடியும் பிறந்தாக வேண்டும். 54. ஆனால் அந்த வித்து ஜெனிப்பிக்கப்பட்டிருப்பது நிச்சயம் என்றால், அப்பொழுது அது மறுபடியும் உயிர்த்தெழுகிறது. அது உயிர்த்தெழும்புவதிலிருந்து அதை தடை செய்ய அங்கு ஒன்றுமே இல்லை. அது வந்தே ஆகவேண்டும். ஏனென்றால், அது ஜெனிப்பிக்கப்பட்டு அதனுடைய தாவர உயிர் அதற்குள் இருக்கிறது. 55. இப்பொழுது, நம்முடைய நீதிமானாக்கப் படுதலுக்காகவும், மனிதன் மறுபடியும் உயிர்த்தெழுந்து நாம் மறுபடியும் ஜீவிப்போம் என்று நிரூபிப்பதற்காகவும், முதலாவது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவனை ஒரு விசுவாசி தனக்குள் பெற்றிருக்கிறான், நாம் நிச்சயமாக மறுபடியும் ஜீவிக்க போகிறோம். ஏனென்றால் நாம் ஜெனிப்பிக்கப் பட்டிருக்கிறோம். இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாம் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்திருக்கிறோம். 56. மேலும் நாம் இயற்கையில் பார்க்கக்கூடிய ஒவ்வொன்றும்....... நான் இங்கே அனேக காரியங்களை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அதைக்குறித்து நான் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். ஆனால், அது என்னவென்றால், நீங்கள் எங்கே போனாலும், எதைப் பார்த்தாலும் அங்கே ஒரு மரணம், அடக்கம் பண்ணப் படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் இல்லாமல் எந்த காரியமும் இல்லை என்பதை நீங்கள் காண்பதற்கு அது போதுமானதாக இருக்க வேண்டும். அந்த மரணம், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல் அவற்றை காணாமல் நீங்கள் கடந்து போகவே முடியாது. அது கூடாத காரியம். 57. மேலும், அதன் பிறகு, மறுபடியும், எந்த ஒன்றும் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும்போது மாத்திரமே அதற்கு உயிர்த்தெழுதல் உண்டு என்று நாம் கண்டு கொண்டோம். அது ஒருவேளை தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றால், அது எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும், எவ்வளவுதான் கண்ணைக் கவர்வதாக இருந்தாலும், பார்ப்பதற்கு உயிர்ப்பிக்கப் பட்ட மற்ற விதைகளைக் காட்டிலும் மிக அழகாக காட்சியளித்தாலும் அது ஒரு போதும் முளைத்தெழும்புவதில்லை. அது இந்த வாழ்க்கையை மாத்திரம் வாழ்ந்து, அதோடு முடிந்து போகிறது. ஆனால், அது ஜெனிப்பிக்கப்பட்டிருக்குமென்றால் அது திரும்ப முளைத்தெழும்ப வேண்டும். 58. என் நண்பர்களே, அது அவ்விதமாகத்தான் இருக்கிறது. இந்த பிற்பகல் வேளையில் இங்கே இருக்கிற நாம், நம்முடைய சகோதரனுக்கு இந்த மரணமானது என்ன செய்திருக்கிறது என்று பார்க்கும்படி வந்திருக்கிறோம். அது ஜெனிப்பிக்கப்பட வேண்டும். நாம் ஒரு சபையை சேர்ந்தவர்களாய் இருக்கலாம், நாம் நல்ல மக்களாய் இருந்திருக்கலாம், அண்டை வீட்டாரிடம் நல்ல குணா லட்சணம் உள்ளவர்களாய் இருந்திருக்கலாம், ஒரு நல்ல தகப்பனாக, தாயாக, மகனாக, மகளாக, ஆனால் தேவனுடைய ஆவியினால் ஜெனிப்பிக்கப்படுகிற வரைக்கும் நாம் அந்த உயிர்த்தெழுதலில் ஒரு போதும் திரும்பி வருவதில்லை . அது முடிந்தது. 59. இந்த காரியங்களை குறித்து தான் அது நம்மிடம் பேசுகிறது. இயற்கை ஒவ்வொரு நாளும் அழைக்கிறது. சூரியன் உதிக்கிறது பிறகு மறைகிறது. சந்திரனும் நட்சத்திரங்களும் வருகின்றன, அவற்றுக்கும் அதே காரியம் தான். இயற்கையில் உள்ள எல்லாமே ஒரே ஒரு காரியத்தில் தான் சுழன்று கொண்டிருக்கின்றன, மரணம், அடக்கம் பண்ணப் படுதல், உயிர்த்தெழுதல் மரணம் அடக்கம் பண்ணப் படுதல், உயிர்த்தெழுதல். நம்முடைய ஜீவனின் ஒவ்வொரு நாளும், ஏதோ ஒன்று நமக்கு அந்த மரணம், அடக்கம் பண்ண ப் படுதல், உயிர்த்தெழுதல் என்பவைகளைக் குறித்து சாட்சி பகர்ந்துகொண்டிருக்கிறது. 60. அநேக தடவைகள் நாம் அவற்றின் மீது ஏறி நடந்து போகிறோம். நாம் அப்படி செய்யாதிருப்போமாக. அதற்காக அது அங்கே வைக்கப்படவில்லை. இந்த உலகமானது அவ்விதமாக ஒரு ஒழுங்கில் அமைக்கப்பட்டிருக்கிறது. அது நித்திய ஜீவனுக்காக என்று நாம் அறிந்திருக்கிறோம். மேலும் விதைகளை நாம் பார்க்கும் பொழுது அவைகள் ஜெனிப்பிக்கப் படாமலும், தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றாமலும் இருக்கும் பொழுது, அது மறுபடியும் எழும்ப முடியாது. நாம் நல்லவர்களாக இருந்தாலும், சபை அங்கத்தினராக இருந்தாலும், நல்ல துணிச்சல் உள்ள அண்டை வீட்டுக்காரராகவும், அருமையான மக்களாகவும், படித்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருந்தாலும் ஜெனிப்பிக்கப்படாதிருந்தால் நாமும் மீண்டும் உயிர்த்தெழ முடியாது. விஞ்ஞானம் அங்கே என்ன நடந்தது என்று தான் சொல்லுகிறது. ஆனால் விஞ்ஞானம் அந்த ஜீவனை கொடுக்க முடியாது. 61. ஜீவன் என்பது, அது தேவனுடையது அவருடையது மாத்திரமே. மேலும், ஜீவனைக் கையாளுகிறவர் அவர் ஒருவரே. ஆகவே, அந்த வார்த்தையினால் ஜெனிப்பிக்கப்படுகிற அந்த இடத்திற்கு நாம் வந்தே ஆகவேண்டும். இல்லை என்றால் நாம் ஒரு போதும் உயிர்த்தெழ முடியாது. நம்முடைய - நம்முடைய - நம்முடைய ஜீவன் முற்றிலும் முடிந்துவிட்டது. நாம் இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கையை முடிக்கும்போது நாம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அல்லது தேவனுடைய ஜீவனைக்கொண்டு ஜெனிப்பிக்கப்பட்டிருக்கவில்லையென்றால், அவ்வளவுதான் நம்முடைய கதை இங்கேயே முற்றிலும் முடிந்து போகிறது. 62. இப்பொழுது, இந்த சிறிய, குளிர்ந்து போன இந்த சட்டம் இங்கே கிடத்தப் பட்டிருக்கிறது. தேவனுடைய தீர்மானத்துக்குள் அவர் எந்த பங்கை வகித்தார் என்பதை இங்கே உள்ள நம்மில் எவராலும் அதைச் சொல்ல முடியாது. அவர் தேவனுடைய சிருஷ்டிப்பில் ஒரு பாகமாக இருந்தார். அவர் ஒரு மனிதன், தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதன். அவர் இங்கே கிடத்தப் பட்டிருக்கிறார். இப்பொழுது நித்திரையாயிருக்கிறார். இப்பொழுது அதனுடைய காரியம் என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்நாளில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியிருப்பார் என்றால், அப்பொழுது நிச்சயமாக கார்னட்டுக்கு ஒரு உயிர்த்தெழுதல் உண்டு. அப்படி இல்லாதிருக்க வேறு வழியே இல்லை. இது கார்னட்டுடைய முடிவு அல்ல. 63. நல்லது, நாமெல்லாரும் நம்முடைய ஜீவியத்தில் இந்த வழியாகத் தான் கடந்து செல்ல வேண்டும். நாம் இருளிலிருந்து கடந்து அதே வழியாக கடந்து செல்ல வேண்டும். மேலும் நாம் ஒவ்வொருவரும் இவ்விதத்திலோ அல்லது வேறெவ்விதத்திலோ அந்த நிழலின் ஊடாக, மரண இருளின் பள்ளத்தாக்கின் ஊடாக கடந்து போகிறோம். ஆனால் நாம் இங்கே இந்த பூமியில் வைக்கப்பட்டிருப்பது, ஒரு....... 64. உலகத்தைப் போல. இயேசு சொன்னார், ”நீங்கள் தேவனுக்கும், ஐஸ்வர்யத்துக்கும் சேவை செய்ய முடியாது." ''ஐஸ்வர்யம்'' என்பது இந்த உலகம். ஒரே நேரத்தில் தேவனுக்கும் உலகத்துக்கும் சேவை செய்ய முடியாது. 65. நமக்கு நம்முடைய விருப்பத்தேர்வு இருக்கிறது. நாம் தேவனால் பரிசுத்த ஆவியைக் கொண்டு ஜெனிப்பிக்கப்பட முடியும். அதனால் நமக்கு நித்திய ஜீவன் உண்டாகிறது. அப்படி நாம் செய்யவில்லை என்றால், நாம் மரிக்கும் பொழுது அதோடு காரியம் அவ்வளவுதான். அதன் பிறகு நாம் நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாய் இருக்கிறோம். எதற்கு என்றால் அந்த சரியான விருப்பத்தேர்வை நாம் ஏன் செய்யவில்லை என்பதற்கு, நியாயம் தீர்க்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படும். அதுதான் அந்த சரியான விருப்பத்தேர்வை நாம் புறக்கணிக்கும் பொழுது, அதுதான் பின் தொடர்கிறது. 66. ஆனால் நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையிலும், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியின் அடிப்படையிலும், நான் புரிந்து கொண்டது என்னவென்றால். இந்த தம்பி அந்த நிபந்தனையை சந்தித்து விட்டார். அவர் தேவனுடைய ஆவியால் பிறந்திருந்தார். ஒரு மாறின மனிதனாக. இந்த சிறு பையனின் மேல் தேவனுடைய ஆவியானவர் இருந்தார். இவர் ஒரு வைராக்கியமான கிறிஸ்தவனாக இருந்தார். அவர் தேவனுடைய நோக்கத்தை தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேற்றினார். ஒருவேளை அது ஒரு குறுகிய காலமாக இருந்திருக்கலாம். 67. ஆனால், தேவன் சில நேரங்களில் ஒரு மனிதனுக்கு அவனிடத்திலிருந்து ஒரு குறுகிய கால சேவையை பெற்றுக்கொள்வதற்கு வருடக்கணக்கில் பயிற்சி கொடுக்கிறார். யோவான் ஸ்நானகன் அப்படித்தான், ஒரு ஆறு மாத ஊழியத்திற்காக அவன் முப்பது வருடங்கள் தன்னை வனாந்திரத்துக்குள் வைத்துக்கொண்டான். இயேசு கிறிஸ்துவும் ஒரு மூன்று வருட ஊழியத்திற்கும், மற்றும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவருக்கு முப்பது வருடம் பிடித்தது. தேவன் மனிதர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை வளர்த்து வருகிறார். அது அவருடைய நோக்கமாக இருக்கிறது. காலம் என்பது மனிதனுக்கு தான். தேவனோ நித்தியமாய் இருக்கிறார். 68. நான் விசுவாசிக்கிறேன் தேவன் இந்த வாலிபனை ஒரு நோக்கத்திற்காகவே இந்த பூமியின் மேல் கொண்டுவந்தார் என்று. 69. நீங்கள் கவனித்தீர்கள் என்றால், சரியாக அவருடைய வியாதியின் காலங்களிலும் இன்னும் மற்ற காரியங்களிலும் இது ஒரு நோக்கத்திற்காகவே அவரை தாக்கி இருக்கிறது. தேவன் நினைத்திருந்தால் இந்த மனிதனை சுகமாகி ஆரோக்கியம் உள்ளவராக ஆக்கியிருக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்தார், அவனுடைய ஜீவனை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, அவன் இனி சாகவே முடியாத ஒரு இடத்தை அடையும் வரைக்கும் அவனை ஜீவிக்க செய்தார். 70. இப்பொழுது போலியோவும் கூட அவரைக் கொல்ல முடியாது. அவர் போலியோவினால் மரிக்கவில்லை . வேறு எந்த வியாதியும் கூட அவரைக் கொல்லவில்லை . அந்த வியாதிகளுக்காக நாங்கள் ஜெபித்தோம், அவரும் நானும், இன்னும் இந்த சுற்றுப் பக்கத்தில் உள்ள கேம்ப்பெல்ஸ்வில்லே யைச் சுற்றிலும் இருக்கிறதான கிறிஸ்தவர்கள் அவனுக்காக ஜெபித்தார்கள். இல்லை, அந்த வியாதிகள் அவரைக் கொல்லவில்லை. பாருங்கள்? 71. அது கார்னெட் போவதற்கான நேரமாய் இருக்கிறது. அவர் போயாக வேண்டும். அவர் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றி விட்டார். அவர் கிறிஸ்துவிடம் வந்து ஜெனிப்பிக்கப்பட்டு விட்டார். இந்த காலத்திற்கு முன்பாக ஒருவேளை அவர் மரித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? போலியோ அவரை தேவனிடம் விரட்டியது. அவர் ஒரு புகையிலை ஏலம் விடுபவராக இருந்திருக்க வேண்டியவர். அதுதான் அவருடைய மனதில் இருந்தது. ஆனால் அவரைக் குறித்த தேவனுடைய நோக்கம் அதுவாக இல்லவே இல்லை. அது நமக்கு தெரியும். தேவனுடைய நோக்கம் இவர் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்பதே. 72. இப்பொழுது அவர் ஒரு புகையிலை ஏலம் விடுபவராக இருக்க விரும்பினார் என்று யாரோ சொன்னார்கள். ஒருவேளை இப்போதிலிருந்து ஒரு 75 வருடத்திற்கு இந்த உலகம் நிலைத்திருந்திருந்தால் கார்னட் ஒரு மிகப்பெரிய புகையிலை ஏலம் விடுபவராக இருந்திருப்பார். ஒருவேளை, அப்பொழுது அவர் மரித்திருந்தால் ஒரு ஊழியக்காரர் இவருடைய அடக்க ஆராதனையில் மிஞ்சிப்போனால் என்ன சொல்லுவார்? ''கார்னட் ஒரு மிகப்பெரிய புகையிலை வியாபாரி” என்று சொல்லி இருப்பார். 73. ஆனால் இன்றைக்கு நாம் என்ன சொல்ல முடியும்? என்றால், ”அவர் ஒரு கிறிஸ்தவர்” என்று. ஒரு ஏலம் விடுபவராக ஜீவ அணுவை பெறாமல், வெறுமனே அந்த சந்ததிக்கு ஒரு பெரிய ஞாபகார்த்தமாக இருந்து அவர் கடந்து போய் இருப்பார். சில மனிதர்கள் மத்தியில் அவரும் ஒருவராக. இப்பொழுது அவர் சாவாமை உள்ளவர்கள் மத்தியில் இருக்கிறார். அவர் உயிர்த்தெழுதலில் வந்தே ஆகவேண்டும். அவரை வராமல் பிடித்து வைப்பதற்கு எதுவுமே இல்லை. அவர் வந்தாக வேண்டும், ஏனென்றால் அவர் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினார். தேவனுடைய பரிசுத்த ஆவியினாலும், அவருடைய சரீரத்தில் வைக்கப்பட்டிருந்த நித்திய ஜீவனாலும் அவர் ஜெனிப்பிக்கப் பட்டிருந்தார். அந்த அளவுக்கு, அவர் ஒருவேளை இப்படி சொல்லி இருக்கலாம், எனக்குத் தெரிந்திருந்தால்..... 74. கடந்த முறை நான் அவனைப் பார்த்தபோது, அவன் சொன்னான் ''ஒருவேளை மற்ற ஆரோக்கியமான பையன்களைப் போல நானும் நன்றாக ஆரோக்கியமாக பலம் உள்ளவனாக இருந்திருந்து நானும் அவர்களைப்போல ஓடி ஆடி திரிய முடியும் என்று நான் அறிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? நன்றாக குடித்துவிட்டு, என்னுடைய வேகம் கூட்டப்பட்ட காரில் ஏறி சாலைகளில் வேகமாக இங்கும் அங்குமாக ஓடித் திரிந்து இப்போது நான் அறிந்திருக்கிற இந்த காரியங்களை எல்லாம் நான் அறியாது இருந்திருப்பேன்”. அவன் சொன்னான், ''ஆனால் அதுபோன்று பத்தாயிரம் வாழ்க்கை கிடைத்தாலும் இந்த வாழ்க்கையை அதற்கு ஈடாக நான் ஒரு போதும் கொடுக்க மாட்டேன்” என்று. ஒரு பதினெட்டு வயது வாலிபன், பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கிற ஒரு வாலிபன். ஒருவேளை அந்த பிசாசுக்கு எப்போதுமே ஒரு இலக்காக இருந்திருப்பான். 75. ஆனால், அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும்படி, தேவன் அவனை இப்படிப்பட்ட ஒரு நிலைக்குள் தள்ள வேண்டி இருந்தது. அயலகத்தாராகிய நீங்கள் எல்லாரும் அவனுடைய பொறுமையை குறித்தும், அவனுடைய சாட்சியைக் குறித்தும் அறிந்திருக்கிறீர்கள். அவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் என்றும், எப்படியாக அவனுடைய வாழ்க்கை உங்களுக்கு முன்பாக எடுத்து சொல்லப்பட்டது என்றும், நியாயத் தீர்ப்பில் அவனுடைய வாழ்க்கை மறுபடியுமாக சாட்சியாக சொல்லப்படும். தேவன் அவனுடைய வாழ்க்கையில் என்ன எதிர்பார்த்தார் என்பதற்கு அவன் ஒரு முன்மாதிரியாக விளங்கினான். அவனுடைய வாழ்க்கையில் அவன் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினான். 76. எல்லா இயற்கையும் ஜெனிப்பிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதேபோல இந்த சகோதரனும் அவர் தம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றி அவரும் உயிர்த்தெழுந்திருப்பார் என்கிற ஒரு வாக்குத்தத்தத்தினால் ஜெனிப்பிக்கப்பட்டு இருந்திருந்தால், இந்த கார்னெட்டை நாம் மீண்டும் பார்க்கத்தக்கதான அவருடைய உயிர்த்தெழுதலை நாம் எப்படி சந்தேகிக்க முடியும்? ஏன், கார்னெட் திரும்பி வர மாட்டார், என்று சொல்லுவது ஒரு முற்றிலுமான பைத்தியக்காரத்தனமாக இருக்கும். கார்னெட் திரும்பி வரமாட்டார் என்றால், அங்கே ஒரு சூரியன் உதிக்கவும் இல்லை மறையவும் இல்லை, அது திரும்ப வரப்போவதும் இல்லை . கார்னெட் திரும்ப வரமாட்டார் என்றால், ஒரு மலர் மரிக்கவும் இல்லை, மறுபடியும் தோன்றவும் இல்லை . அது தேவனுடைய தேவையை சந்தித்தது. அது தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றியது. மேலும் அது ஜீவனைக்கொண்டு ஜெனிப்பிக்கப்பட்டது. ஆகவே அது திரும்பவும் வருகிறது. நல்லது நாம் உயிர்த்தெழும்புவதில்லை என்றால், நாம் மிகவும் பரிதபிக்கப் படத்தக்கவர்களாகவும், நிர்பாக்கியம் உள்ளவர்களாகவும் இருப்போம். ஆனால் இப்பொழுதோ நாம் எதற்காக உயிர்த்தெழுந்து வரவேண்டும் என்றும் உயிர்த்தெழுந்து வரவேண்டுமென்றால் அதற்கு நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றும், இங்கே நாம் பார்க்கிறோம். 77. கார்னெட் மறுபடியும் ஜீவிப்பார். அவர் இப்பொழுது உயிரோடுதான் இருக்கிறார். அவர் வேறொரு உலகத்தில் இருக்கிறார். ஒரு பூ எப்படி மறுபடியும் தோன்றுகிறதோ, அதுபோலவே அவரும் மறுபடியும் வருவார். சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் எப்படி மறுபடியும் உதிக்கின்றன. அதுபோலவே அவரும் மறுபடியும் உயிர்த்தெழுந்து வருவார். ஆனால் பாருங்கள் இவைகளெல்லாம் அடுத்த ஒரு காலத்தை குறித்து சாட்சி பகர ஒரு சாவுக்கேதுவான ஜீவனுக்குள் தான் எழுகின்றன. ஆனால் இவர் உயிர்த்தெழும்பும்போது அது காலத்தின்முடிவாய் இருக்கும், அதன் பிறகு இன்னொரு சாட்சி இருக்கப்போவதில்லை. அவருக்கு நித்திய ஜீவன் இருக்கிறது. அது நிரந்தரமான ஜீவனாக இருக்கிறது. அது நிரந்தரமான ஜீவனாக இருக்க வேண்டுமென்றால் அது நிரந்தரமாக ஜெனிப்பிக்கப்பட வேண்டும். அவர் நித்திய ஜீவனால் ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, அவர் உயிர்த்தெழும்பும் போது அவருக்கு இனி மரணமே இல்லை. அவர் இனி என்றென்றுமாக ஜீவிக்க போகிறார். 78. நான் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அடக்க ஆராதனைகளில் பிரசங்கித்திருக்கிறேன். நான் கார்னட்டைக் குறித்துப் பேசிய இந்த விவரங்களையெல்லாம் அந்த ஆயிரக்கணக்கான அடக்க ஆராதனைகளில் பிரசங்கித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதுபோல இனி நடக்கும் அடக்க ஆராதனைகளிலும் கார்னட்டைக் குறித்துப் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் கார்னெட் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய ஒவ்வொரு தேவையையும் சந்தித்தார். தேவன் அவரை எழுப்புவார். என்று நான் அறிந்திருக்கிற காரணத்தால், அவரைக் குறித்த என்னுடைய நம்பிக்கையை எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அவருடைய வாழ்க்கை அவருக்குள் பரிசுத்த ஆவியாகிய மலர் வாசமாய் இருந்தது என்பதை நிரூபிக்கிறது. அதாவது அவருக்குள் தேவன் வாசமாய் இருந்தார். அந்த வாலிபன் ஒரு மாற்றமடைந்த வாலிபனாய் இருந்தான். அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அவனுடைய வாழ்க்கை அதைக்குறித்து சாட்சி பகர்ந்தது. அவன் உண்மையில் மாற்றம் அடைந்திருந்தான். 79. இப்பொழுது, ஒருவேளை நாம் இப்படி சொல்வோம் என்றால், அதாவது, இனிமேல் உயிர்த்தெழுதல் என்பது இல்லை, அதாவது” இதுதான் கார்னெட்டுடைய முடிவு” என்று. கார்னெட், அவரை நாம் பார்ப்பது எதுவரைக்கும் என்றால் இந்த பிற்பகலில் அங்கே கொண்டுபோய் நாம் அவரை அடக்கம் பண்ணுகிறவரைக்கும்தான். அதன் பிறகு அவருக்காக எது பேசப் போகிறது? ஒருவேளை யாராவது இப்படி சொல்லலாம், ''ஓ... எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது, எனக்கு தெரியாது” என்று. இப்பொழுது நான் அப்படி செய்யப்பட்டதை ஒரு போதும் கண்டதில்லை. நிச்சயமாக இன்னுமாக முடிவு காலம் வரவில்லை. ஆனால் நீங்கள் அதை சொல்லும் போது நீங்கள் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால்....... 80. தேவனுடைய வார்த்தை கார்னட்டுக்காக சாட்சி பகர்கிறது. தேவனுடைய வார்த்தை சொல்கிறது, ”கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் முழங்கும் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். அந்த வேத வசனங்கள்! ''நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன்'' என்று தேவன் உரைக்கிறார். பாருங்கள்! ஆகவே நீங்கள் வேறுவிதமாய் சொல்வீர்கள் என்றால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக சாட்சி சொல்ல வேண்டியதாய் இருக்கும். தேவனுடைய வார்த்தை இந்த தம்பிக்காக சாட்சி பகர்கிறது அப்படியென்றால் தேவனுடைய சொந்த வார்த்தையைக் காட்டிலும் இனி வேறென்ன நமக்கு வேண்டும்? ஏனென்றால் அவரே தம்முடைய வார்த்தையாக இருக்கிறார். வார்த்தை தேவனாக இருக்கிறார். அவர் தேவனாக இருக்கிறார். அவரே கார்னெட் உயிர்த்தெழுவார் என்று சாட்சி பகர்கிறார். கார்னெட் மீண்டும் உயிர்த்தெழுவார். 81. எல்லா சிருஷ்டியுமே! அப்படி என்றால் நாம் இப்படி சொல்ல வேண்டியதாய் இருக்கும், ''சூரியன் உதிக்கவில்லை , இல்லை, அப்படியென்றால் தேவன் ஏதோ தவறு செய்து விட்டார். அந்த சூரியன், அந்த சூரியனை நாம் பார்க்கப் போவதில்லை" பாருங்கள்? அது ஒரு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். 82. அந்த சூரியன் சொல்லுகிறது "இவர் மீண்டும் உயிர்த்தெழுவார்'' என்று, அந்த மலர் சொல்லுகிறது ”இவர் மீண்டும் உயிர்த்தெழுவார்'' என்று, அந்த வார்த்தை சொல்லுகிறது ''இவர் மீண்டும் உயிர்த்தெழுவார்'' என்று, ஒவ்வொரு இயற்கையும், இயற்கை முழுவதும் சொல்லுகிறது ''இவர் உயிர்த்தெழுவார்'' என்று. பூமி, அதன் சுழற்சி சொல்லுகிறது ”இவர் மீண்டும் உயிர்த்தெழுவார்” என்று. நீங்கள் காண்கிற ஒவ்வொன்றும், சொல்லப்போனால் தேவனுடைய வார்த்தை ! அந்த ஒன்றான.... பரிசுத்த ஆவி, என்னுடைய இருதயத்திற்குள்ளும், இங்கு இருக்கிறதான மற்றெல்லா கிறிஸ்தவ விசுவாசிகள் அவர்களுக்குள்ளும் விசுவாசத்தினால் இப்பொழுது துடித்துக் கொண்டிருக்கிற அந்த நாடித்துடிப்பு, அதுவும்கூட சொல்லுகிறது ”இவர் மறுபடியும் உயிர்த்தெழுவார்'' என்று. மேலும் பாருங்கள்! இவர் உயிர்த்தெழமாட்டார் என்று சொல்லும்போது, நீங்கள் உங்கள் விசுவாசத்திற்கு மேலாக ஏறி நடக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு மேலாக ஏறி நடக்கிறீர்கள். சிருஷ்டிப்புகளுக்கு மேலாக மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக ஏறி நடக்கிறீர்கள். 83. இது கார்னட்டின் முடிவு இல்லை. இது இந்த பூமியின் மேல் அவர் வந்ததற்கான நோக்கத்தின் முடிவு. ஆனால், அவர் மீண்டும் உயிர்த்தெழுவார். பாருங்கள்! முழு காரியமும்: அவர் உயிர்த்தெழுவார். ஆகவே நாம் என்னவாக இருக்கிறோம் என்பதுதான் நம்முடைய கவலை. 84. உண்மையில் சொல்லப்போனால், இந்த வாலிபன் இப்படியாக இங்கே இவ்வாறு படுத்து கிடப்பதை பார்ப்பதற்கு நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. அதுவும், இளமைத் துடிப்புள்ள ஒரு வயதில். ஆனால் உங்களுக்கு தெரியுமா? தேவன், தமக்கு தேவைப்படும்போது.... நீங்களும் கூட உங்கள் தோட்டத்தில் இருந்து ஒரு மலரை பறிக்கும்போது நீங்கள் வாடிப்போன ஒன்றை பறிக்க விரும்புவதில்லை. சில நேரங்களில் உங்களுக்கு ஒரு மொட்டை கூட பறிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் அந்த மொட்டு உங்களுடைய பூங்கொத்தை அலங்கரிக்கும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை தேவனுக்கும் கூட இதுபோல ஒரு மொட்டு தேவைப்பட்டிருக்கலாம்! அதைத்தான் அவர் இங்கே பறித்துக் கொண்டார், மகிமையில் உள்ள அவருடைய பலிபீடத்தை அலங்கரிக்க ஒரு மொட்டு அவருக்கு தேவைப்பட்டது. ஆனால் இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்கிற உத்தரவாதத்தோடு ஒவ்வொன்றும் அதைக்குறித்து சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய விசுவாசம் கூட இவர் உயிர்த்தெழுவார் என்று கூறுகிறது. வார்த்தையும் சொல்லுகிறது இவர் உயிர்த்தெழுவார் என்று. சந்திரனும் சொல்லுகிறது இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று. நட்சத்திரங்கள் சொல்லுகின்றன இவர் மறுபடியும் உயிர்த்தெழுவார் என்று. அந்த சூரியன், அந்த மலர்கள், அந்த இயற்கை, ஒவ்வொன்றும் இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று கூறுகின்றன. 85. ஏனென்றால், கார்னட்டை அறிந்த ஒவ்வொருவரும் இதை அறிந்திருக்கின்றனர், அது என்னவென்றால், அவர் ஒரு கிறிஸ்தவராயிருந்தார் என்று. இந்த சரீரத்திற்கு ஒரு மாற்றம் உண்டானது என்று அறியாமல் நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் வர முடியாது. இவர் ஜீவனால் ஜெனிப்பிக்கப்பட்டிருந்தார். 86. என்னுடைய ஜெபம் என்னவென்றால், இந்தப் பிற்பகலில் இங்கே உயிரோடிருக்கிற நாம் எல்லோரும் இந்த ஒரு உதாரணத்தைப் பார்த்து, தேவன் என்ன செய்கிறார் என்பதை அறிந்து நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும் நாம் அப்படி செய்யாதிருப்போம் என்றால் அந்த நித்திய ஜீவ அணுவை நமக்குள் நாம் பெற்றிராதிருப்போம் என்றால், இந்த சகோதரன் சென்ற அதே வழியில்தான் நாமும் செல்ல வேண்டும் என்று அறிந்து, நாம் நம்மை ஜெனிப்பித்துக் கொள்வோமாக, நாம் கிறிஸ்துவை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறப்போமாக. ஏனென்றால், சகோதரனே சகோதரியே நாம் ஒவ்வொருவரும் இதை சந்திக்க வேண்டும். நீ யாராயிருந்தாலும் அது ஒரு காரியம் இல்லை , எப்படிப்பட்ட ஒரு வியாபாரத்தில் நீ இருந்தாலும், நீ எவ்வளவு வாலிபனாகவோ அல்லது வயதானவனாகவோ இருந்தாலும் நீயும் அதை சந்தித்து தான் ஆக வேண்டும். நீ அதை சந்தித்தே ஆக வேண்டும். ஆகவே முதலாவது கிறிஸ்துவினால் ஜெனிப்பிக்கப்படாமல் உனக்கு நித்திய ஜீவன் இருக்கிறது என்று ஒரு போதும் உரிமை கோர துணிகரம் கொள்ளாதே. 87. அப்படி என்றால், கல்வாரியில் மரணம் ஜெயமாக விழங்கப்பட்டது. கார்னட் மீண்டும் உயிர்த்தெழுவார். எல்லா இயற்கையும், இப்போது அண்டைவீட்டாரும், அந்தப் பையனை அறிந்த ஒவ்வொருவரும், அவனோடு தொடர்பு கொண்டிருந்த ஒவ்வொருவரும் அவன் ஒரு கிறிஸ்தவனாய் இருந்தான் என்று அறிந்திருக்கின்றனர். இப்பொழுது தேவனுடைய வார்த்தையும், சிருஷ்டிப்பு யாவும் இவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றே சொல்லுகின்றன. 88. அவருடைய தாய், அவருடைய தந்தை, அவருடைய உறவினர் எல்லாரும் அது என்னவாயிருந்தாலும், இங்கே இவரை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிற ஜனங்களாகிய நீங்கள் யாவரும், சுவிசேஷத்தின் ஊழியக்காரனாய் இருக்கிற நான் இந்த சகோதரனுடைய சகோதரனாக இவர் உயிர்த்தெழ மாட்டார் என்பதைக் குறித்து தேவனுடைய வார்த்தையிலோ அல்லது இயற்கையிலோ ஒன்றையும் நான் காணவில்லை.... 89. இதை நான் சொல்லும்படி தெரிந்து கொண்டதற்கு காரணம், ஒருவேளை இங்கிருக்கிற யாராவது சபைக்கு அதிகமாக செல்லாமலும், இந்த காரியத்தை குறித்து புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம். நான் இவ்விதமாக நினைக்கிறேன், இது ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ளும்படி செய்யும். அதாவது இங்கே இந்த இயற்கையை நோக்கி பார்க்கிற அந்த எளிமையான விதத்திலேயே என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள முடியும். 90. கார்னட் தேவனுடைய தேவைகளை சந்தித்தார். அவர் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினார். அவர் மரிக்கவில்லை. அவர் என்றென்றுமாக உயிரோடிருந்து நாம் எல்லாரும் வரும்படிக்கு வெறுமனே சிறிது காலம் காத்துக் கொண்டிருக்கிறார். 91. இப்போது அவரை உயிரோடு பெற்றிருந்த அவருடைய தகப்பனார், தாயார், சகோதரர், சகோதரிகள் நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், உறவினர்கள், உங்களுக்கு அவரைத் தெரியும். நீங்கள் அவரை நேசித்தீர்கள். நீங்கள் அவரை நேசிக்காமல் அவரோடு தொடர்பு கொண்டிருக்க முடியாது. பாருங்கள் நீங்கள் இங்கே அவரோடு கூட இருந்தீர்கள். ஆனால் இந்த ஜீவனுக்கு அப்பால் என்ன இருக்கிறது? அவரை உயிர்த்தெழுதலில் சந்திக்கும்படி நாமும் ஆயத்தமாவோம். நாம் அவரை உயிர்த்தெழுதலில் சந்திக்கும் விதத்தில் நாமும் நம்முடைய ஜீவியத்தை ஆயத்தப்படுத்திக் கொள்வோம். 92. மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? என்று அந்த வாக்கியம் கேட்கிறது. ” எனக்கு மாறுதல் எப்போது வரும் என்று எனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன், என்னைக் கூப்பிடும் அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்”. ”தேவ எக்காளம் முழங்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், அதன் பிறகு அந்த நேரத்திலே நாம் உயிரோடு இருந்து மீந்திருப்போம் என்றால், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்”. 93. இது ஒரு நிரூபிக்கும் ஸ்தலம், ஒரு சோதனையின் நேரம். தேவனுடைய நிபந்தனைகளை கார்னெட் சந்தித்தார். மேலும் இன்று கார்னட், அவர் மரிக்கவில்லை , இந்த உலகத்தில் உள்ள மற்றெல்லாவற்றைக் காட்டிலும் அவர் அதிகமாய் நேசித்தவர்களோடு அவர் நித்திரை செய்து கொண்டிருக்கிறார். அவர் நேசித்ததைக் காட்டிலும்.... அவர் பெற்றோர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ அந்த அளவுக்கு அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாரையும் அவர் நேசித்தார். இருப்பினும், அவர் எல்லாரைக் காட்டிலும் உன்னதமாய் நேசித்தது இயேசு கிறிஸ்துவை. ஆகவே, அவர் அவரோடு கூட இருக்கும்படி சென்றுவிட்டார். ஆகவே அவருடைய குறைந்த அளவு அன்பை பகிர்ந்து கொண்டவர்களாகிய நாம் எல்லோரும் அந்த மகத்தான உயிர்த்தெழுதலில் அவரை சந்திப்பதற்கு ஆயத்தமாவோமாக. ஒரு நிமிடம் நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 94. நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தி இருக்கும் வேளையில். நான் கார்னட்டைக் குறித்து அதிகமாக சொல்ல முயற்சிக்க வில்லை . அவர் ஒரு கிறிஸ்தவர். அவர் என்னவாக இருக்கிறார் என்று அவருடைய சொந்த ஜீவியமே சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்கு சொல்ல முயற்சித்தது, அவருக்குப் பிரியமானவர்களே அவர் மீண்டும் உயிர்த்தெழுவார். அது உங்களுக்கு நிரூபிக்கப்படும். இது அவருடைய முடிவு அல்ல. அவர் மறுபடியும் உயிர்த்தெழுவார் என்பதற்கான உத்தரவாதம் தேவனுடைய குமாரனின் இரத்தத்தின் மூலமாக எழுதப்பட்டிருக்கிறது. 95. இப்பொழுது நாம் நம்முடைய இருதயங்களை ஆயத்தம் செய்வோம், ஏனென்றால், நாமும் இதுபோன்ற ஒரு இடத்திற்கு அதாவது ஒரு அடக்க ஆராதனைக்குக் கொண்டு வரப்படும் பொழுது, நமக்கு அன்பானவர்கள் நீங்களும் இவரைப்போலவே ஆயத்தமாய் இருந்தீர்கள் என்று அறிந்துகொள்ளத் தக்கதாக. இந்த வாலிபனுடைய தகப்பனும், தாயும், இவருக்கு அன்பானவர்களும், அந்த மகத்தான காரியம்.... 96. உங்களுக்கு தெரியுமா? நீங்கள் எல்லாரும் வேதனைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் இப்பொழுதுதான் ஒரு சிறு குழந்தையை தவற விட்டேன், ஒரு சிறுபெண். உங்களுடைய இருதயத்தில் எப்படி ரத்தம் வடிகிறது என்று எனக்கு தெரியும். 97. ஆனால், பாருங்கள், ஒருவேளை கார்னெட் இழக்கப்பட்டுப் போயிருப்பார் என்றால், அது நிச்சயமாகவே ஒரு பயங்கரமான நேரமாக இருக்கும். ஆனால், இப்பொழுதோ உங்களுடைய மகன் கிறிஸ்துவோடு கூட இருக்கிறான் என்று அறிந்து கொள்ளும் பொழுது அது உங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு மகிமையான வேளையாக இருக்கிறது. அவன் எப்பொழுதாவது போய்த்தானே ஆக வேண்டும்? பாதையின் முடிவிலே அவன் இன்னுமாக தன்னுடைய விசுவாசத்தில் நிலைத்திருக்கிறான். தேவன் அவனை தன்னோடு வைத்துக்கொண்டார். அவனுடைய சொந்தபந்தங்களாகிய நீங்கள் அவன் என்னவாக இருந்தான் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் இப்பொழுது அவன் ஒருவேளை வேறு பாதையில் சென்று விட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? இப்பொழுதோ நாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. கார்னட் இயேசுவோடு இருக்கிறார். நாமும் கூட அவர் இருக்கிற இடத்திற்கு அவரோடு கூட இருக்கும்படி செல்ல ஆயத்தமாவோமாக. 98. கிருபையுள்ள தேவனே, தண்ணீர்கள் மேல் ஆசைவாடி ''வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று சொன்ன மகத்தான நித்திய எகோவாவே. உலகத்தை உம்முடைய வார்த்தையினால் பேசி சிருஷ்டித்தவர்ரே. நாங்கள் மறுபடியும் உயிர்த்தெழுவோம் என்று அதே வார்த்தையை கொண்டு வாக்குத்தத்தம் செய்திருக்கிறவரே. இப்பொழுதும் பிதாவே! இந்தப் பிற்பகலிலே நாங்கள் எங்களை உம்மிடம் சமர்ப்பிக்க விரும்புகிறோம். 99. நான் இந்த இந்த வாலிப சகோதரனுடன் இந்த வாழ்க்கையில் பழகிய விதத்தில் அவருக்கும் எனக்கும் இடையில் எப்படிப்பட்ட ஒரு சாவாமை உள்ள அன்பு உண்டாகியிருந்தது! நான் இங்கே உயிரோடு இருக்குமட்டும் அந்த தீரமிக்க, அந்த சிறிய போர்வீரன் எப்படியாக அந்த படுக்கையிலே படுத்துக்கொண்டு, அந்தசெயற்கை சுவாச கருவிக்குள் இருந்துகொண்டு, மூச்சு வாங்கிக்கொண்டு, கர்த்தராகிய தேவனை துதித்துக் கொண்டு இருந்தார் என்பதை எப்போதும் நினைவு கூற வேண்டியவனாய் இருக்கிறேன். அவர் தன்னுடைய பொறுமைக்கும், எதை குறித்தும் புகார் சொல்லாத ஒரு குணத்துக்கும், எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தமே ஆகட்டும் என்று நினைக்கிற விஷயத்திலும் எனக்கும்கூட இவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். நீர் அவரை எங்கள் முன்னிலையில் வைத்தீர், இப்பொழுதோ அவரை எங்கள் முன்னிலையில் இருந்து நீர் எடுத்துக் கொண்டீர். 100. கர்த்தராகிய தேவனே! இந்த பிற்பகலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற நாங்கள் ஒவ்வொருவரும், மேலும், நான் இவ்விதமாக உணர்கிறேன், ஒருவேளை கார்னட் நான் இதை சொல்ல வேண்டும் என்று விரும்புவார் என்று. அதாவது, நாங்கள் இன்னும் ஆயத்தம் ஆகவில்லை என்றால் நாங்கள் எல்லாரும் ஆயத்தமாவோமாக. பிதாவே நான் சொன்ன வண்ணமாக நாங்கள் ஜெனிப்பிக்கப்பட்டு, அவர் பெற்றுக் கொண்ட அதே பரிசுத்த ஆவியினாலே நாங்களும் ஆயத்தமாகி, அவரை நாங்கள் சந்திக்க கிறிஸ்துவுக்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கையைபோல ஒரு வாழ்க்கையை நாங்களும் பெற்றுக் கொள்வோமாக. 101. இந்த அன்பான தாயையும், இந்த தகப்பனாரையும் நீர் ஆசீர்வதியும். அந்தப் பெற்றோர், உற்றார், உறவினர் அவர்கள் யாராக இருந்தாலும் சரி உம்முடைய பரிசுத்த பிரசன்னம் 'பிதாவே' அவர்கள் அனைவரோடும் இருப்பதாக. அவர்கள் இதுவரை எப்போதுமே சிந்திக்காத அளவுக்கு சிந்திக்கத்தக்கதாக ஒரு மகத்தான வேளையாக இது இருப்பதாக. இந்த ஒரு சிறு வாழ்க்கை எதற்காக இவ்விதமாக வாழப்பட்டது என்று அவர்கள் சிந்திப்பார்களாக. அது ஒரு சாட்சியாகவும் ஒரு முன்னுதாரணமாகவும் இருந்தது. 102. இதோ இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த வாலிபர், அந்த சகோதரனோடு பழகி இருந்தவர். ஒரு சிறு பையன் என்கிற விதத்தில் பாருங்கள்! அவர் முன்பு என்னவாக இருந்தார், அதற்குப் பிறகு அவர் என்னவாக மாறினார் என்பதை பாருங்கள். அவருடைய வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு செய்தியாக இருக்கட்டும் 'பிதாவே' அதுவும் எப்படிப்பட்ட செய்தி என்றால் இவர்கள் எல்லாரும் தங்கள் நண்பனை இனிமேல் மரணமே இல்லாத, துயரமே இல்லாத, இருதய வலியே இல்லாத அக்கரையில் வந்து சந்திக்க அவர்களை ஆயத்தப்படுத்தும் ஒரு செய்தியாக. இதை தந்தருளும் கர்த்தாவே. 103. இந்த வாலிபனை, அவருடைய துடிப்பான வயதிலே அவருக்கு இப்படி நேரிட்டிருக்கிறதை, அவருடைய வாழ்க்கை மாறி, அதாவது சாவுக்கேதுவான வாழ்க்கையிலிருந்து சாவாமையுள்ள வாழ்க்கைக்கு இவருடைய வாழ்க்கை மாற்றப்பட்டிருக்கிறதை பார்த்துக் கொண்டிருக்கிற வயோதிபர்களாகிய நாங்கள், இதோ இந்த பிற்பகலில் இந்த சிறு உதாரணங்களையும், இயற்கையையும் உதாரணமாக காட்டி, மீண்டுமாக அதை தேவனுடைய வார்த்தையில் பொருத்தி, தேவனுடைய ஒரு வாக்குத்தத்தமாக்கி செய்யப்பட்டதான இந்த எளிமையான பிரசங்கத்தின் மூலமாக நாங்கள் அகைக் காணும்படி எங்களுக்குக் கிருபை செய்யும். நீர் சொன்னீர், ''தேவனுடைய வார்த்தை ஒரு வித்தாய் இருக்கிறது'' என்று அப்படியென்றால் ஒரு வித்து அதனுடைய சொந்த இனத்தையே பிறப்பிக்க வேண்டும். 104. கர்த்தாவே நீர் இந்த ஜனங்களை ஆறுதல் படுத்தி ஆசீர்வதிக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். இந்த சிறு பையன் ஒரு செய்திக்காக இங்கே வைக்கப்பட்டிருந்தார் என்று அவர்கள் அறிந்து கொள்வார்களாக. அவன் தன்னுடைய செய்தியை பிரசங்கித்து விட்டான். அந்த புஸ்தகம் மூடப்பட்டுவிட்டது. ஆனால் நாங்கள் எல்லோரும் அவனை மறுபடியும் சந்திப்போமாக! கர்த்தாவே நாங்கள் எல்லோரும் நித்திய ஜீவனைப் பெற்று அந்த கிறிஸ்துவின் அழகில் அங்கே நிற்பதற்குக் கிருபை தாரும். அதுவரைக்கும் எங்கள் எல்லோரையும் உம்முடைய சித்தத்தின் மையத்தில் வைத்து காத்துக் கொள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.